BREAKING NEWS
latest

Monday, March 1, 2021

ஓமானின் அனைத்து Governorates யிலும் உள்ள வணிக நிறுவனங்களையும் வியாழக்கிழமை முதல் மூடுவதற்கு உத்தரவு

ஓமானின் அனைத்து Governorates யிலும் உள்ள வணிக நிறுவனங்களையும் வியாழக்கிழமை முதல் மூடுவதற்கு உத்தரவு;மார்ச்- 4,2021 வியாழக்கிழமை முதல் இது நடைமுறைப்படுத்த முடிவு

Image : Beautiful Oman

ஓமானின் அனைத்து Governorates யிலும் உள்ள வணிக நிறுவனங்களையும் வியாழக்கிழமை முதல் மூடுவதற்கு உத்தரவு

ஓமானில் அனைத்து Governorates யிலும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு மார்ச்-4 வியாழக்கிழமை மூடுவதற்கான முடிவை சுப்ரீம் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஓமன் நியூஸ் ஏஜென்சி சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய உத்தரவு அடிப்படையில் மார்ச்- 4,2021 வியாழக்கிழமை முதல் ஓமானின் Governorates யிலும் உள்ள வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை அறிவிக்கப்பட்டது. இந்த தடை உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த புதிய உத்தரவு வருகின்ற மார்ச்-21 வரையில் முதல்கட்டமாக நடைமுறையில் இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நேரங்களில் வீட்டு விநியோக சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் புதிய உத்தரவில் இருந்து பெட்ரோல் நிலையங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Add your comments to ஓமானின் அனைத்து Governorates யிலும் உள்ள வணிக நிறுவனங்களையும் வியாழக்கிழமை முதல் மூடுவதற்கு உத்தரவு

« PREV
NEXT »