குவைத்திலிருந்து கடந்த ஆண்டு சுமார் 1.5 லட்சம் வெளிநாட்டினர் வெளியேறியதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன;வெளியேறிய வெளிநாட்டவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் வீட்டுத் தொழிலாளர்கள்
Image: Kuwait Airport
குவைத்திலிருந்து கடந்த ஆண்டு சுமார் 1.5 லட்சம் வெளிநாட்டினர் வெளியேறியதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
குவைத்திலிருந்து கடந்த ஆண்டு 140,000 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் வீட்டுத் தொழிலாளர்கள். மேலும் பிப்ரவரி 2020 முதல் உள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு 11,000 குவைத் குடிமக்கள் புதிதாக பல்வேறு துறைகளில் வேலைக்காக சேர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் குவைத்திலிருந்து வெளியேறி இருந்தாலும் 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020-ஆம் ஆண்டில் குவைத்திகள் அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நாட்டில் 4.67 மில்லியன் மக்கள் வசித்து வருவதாக Central Bureau of Statistics தெரிவித்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்ட 4.464 மில்லியன் மக்கள் நாட்டில் வசித்து வந்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டில் நாட்டில் 3.099 மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்கள் வசித்து வந்தனர். இது 2020-யில் 3.210 மில்லியனாக உயர்ந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு துவக்கத்தில் மொத்தம் மக்கள் தொகை 1.365 மில்லியனாக இருந்த நிலையில் 2020 இறுதிக்குள் இது 1.459 மில்லியனாக அதிகரித்துள்ளது.