குவைத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கிய இந்தியர் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் பரிதாபமாக உயிரிழந்ததார்
Image : உயிரிழந்த முகம்மது இலியாஸ்
குவைத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கிய இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்
குவைத்தின் சபா அல் அகமது பகுதியில் வைத்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியா,கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த முஹம்மது இலியாஸ்(வயது-37) இன்று(02/03/21) மாலை 5 மணியளவில் அதான் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிழந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சபிரா என்ற மனைவியும், முகமது ஜாசிம் மற்றும் முகமது நசீம் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த முஹம்மது இலியாஸ் சபா அல் அஹ்மத் பகுதியில் பக்காலாவை(கடை) நடத்தி வந்தார்.குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை திருப்பி தாயகம் அனுப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.