குவைத் வீட்டுத் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த,வர்த்தக அமைச்சகம் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளதாக தகவல் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
குவைத் வீட்டுத் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த,வர்த்தக அமைச்சகம் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளதாக தகவல்
குவைத்திற்கான ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் வீட்டுத் தொழிலாளர்களையும் அதே Category-யில்(பிரிவுகளில்) உள்ள பிற தொழிலாளர்களின் கவுரவத்தை பாதிக்கும் மற்றும் அதற்கு சமமான எந்தவொரு சொற்களையும், சொற்றொடர்களையும் பயன்படுத்த குவைத் வர்த்தக அமைச்சகம் தடை விதித்துள்ளது என்று குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 'விற்க', 'வாங்க' 'வரிசைப்படுத்து' என்ற சொற்களுக்கு பதிலாக 'சேவை பரிமாற்றம்' என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டும் எனவும்,'வேலைக்காரன்' மற்றும் 'வேலைக்காரி(பணிப்பெண்) என்ற சொற்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சொற்களுக்கு பதிலாக "தொழிலாளர்கள்' என்ற வார்த்தையை கண்ணியமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக நாளிதழ் தெரிவித்துள்ளது. அதுபோல் தொழிலாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், அடையாள அட்டைகள், பணி அனுமதி பத்திரங்கள், வீட்டுப் பணியாளர்களின் தனிப்பட்ட ஆவணங்கள் எதுவும் ஆள்சேர்ப்பு விளம்பரங்களில் பயன்படுத்த கூடாது என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.