குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு காரணமாக;சிவில் ஐடி அலுவலகங்களின் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image : சிவில் ஐடி அலுவலகம்
குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு காரணமாக;சிவில் ஐடி அலுவலகங்களின் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சிவில் ஐடி அலுவலகத்தின் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக முடிக்க முடியாத சேவைகளை பெறுவதற்காக மற்றும் தனிப்பட்ட வருகைகள் தேவைப்படும் நபர்கள் தலைமையகத்திற்கு சேவைகள் பெறுவதற்காக வருவதற்காக நேரம்,ஊரடங்கு காரணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
South Surra-வில் உள்ள தலைமை அலுவலகத்தில் குடிமக்கள் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், வெளிநாட்டவர் மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும் செல்லலாம். தனியார் பதிவு மற்றும் மின்னணு கையொப்பம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை செய்யபடும். காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சிவில் ஐடி அட்டைகளைப் பெறுவதற்காக அலுவலகம் செல்லலாம்.
ஜஹ்ரா கவர்னரேட் உள்ள அலுவலகத்தில் குடிமக்கள் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், சிவில் ஐடி அட்டைகளை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை எடுக்கலாம். இதுபோல் அஹ்மதி கவர்னேட்டில் தெற்கு சபாஹியா உள்ள கிளை அலுவலகத்தில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அட்டைகளை பெறவும், பிற சேவைகளுக்கும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும் செல்லலாம். மேலும் முன் அனுமதி பெறுவதற்காக PACI-யின் www.paci.gov.kw. இணையதளத்தில் வழியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்பட்டுள்ளது.