ஓமானில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பு; தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று உச்சக்குழு அறிவிப்பு;இது தொடர்பாக செய்தி தற்போது வெளியாகியுள்ளது
ஓமானில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பு; தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று உச்சக்குழு அறிவிப்பு
ஓமானில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால் நாட்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று உச்சக்குழு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஆபத்துகளை தவிர்ப்பதற்காக ஏப்ரல்-1 முதல் மே-31 வரை ஓமானின் உச்சக்குழு மேலும் கடுமையான மற்றும் விரிவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், தேவைப்பட்டால் முழுமையான ஊரடங்கு விதிக்க கூடும் என்றும் உச்சகுழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஓமானில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அறிவித்துள்ளது. பயணத் தடை மார்ச்-28 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஓமானின் உச்சக்குழு தெரிவித்துள்ளது. தினமும் இரவு 8:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை கட்டுப்பாடு பகுதிநேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்கள் பயன்படுத்த தடையும்,பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று ஓமானின் உச்சகுழு எச்சரிக்கை விடுத்துள்ளது. வணிக நிறுவனங்களும் இந்த நேரத்தில் இயங்காது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.