குவைத்தில் வருகின்ற ரமலான் மாதத்திலும் தற்போது நடைமுறையிலுள்ள பகுதிநேர ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளன
Image : உச்சக்குழு அதிகாரி காலித்
குவைத்தில் ரமலான் மாதத்திலும் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தெரிகிறது
குவைத்தில் ரமலான் மாதத்திலும் தற்போது நடைமுறையிலுள்ள பகுதிநேர ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உச்சக் குழு ஆலோசனைக் குழுத் தலைவர் டாக்டர்.காலித் அல்-ஜரல்லா அவர்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. குவைத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச்-7 அன்று தொடங்கியது. புதிதாக கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து,அதை தடுப்பதை கருத்தில் கொண்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர உச்சக் குழு முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது. இரண்டாம் கட்ட கோவிட் நெருக்கடி தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த அளவிலான தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் சமீபத்திய நாட்களில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
மேலும் நாட்டில் மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ்கள் பதிவாகியுள்ளதையும் சுகாதார வட்டாரங்கள் முன்னரே உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக, சுகாதரத்துறை அதிகாரிகள் தற்போதைய சுகாதார நிலைமையில் தீவிரமான முன்னெச்சரிக்கை தேவை என்றும்,அதை கருத்தில் கொண்டு பகுதிநேர ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என்றும் கூறியிருந்தது. கோவிட் தடுப்பூசி தயாரிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பூசிகள் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் நாட்டில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மெதுவாக்குகின்றன, மேலும் இது தொடர்பான பிரச்சினைகள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் காலித் அல் ஜரல்லா தெளிவுபடுத்தினார் என்றும் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.