குவைத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(மார்ச்-7) முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு மீணுடும் அறிவிக்கப்பட்டுள்ளது;அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
Image : Kuwait City
குவைத்தில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச்-7) முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது
குவைத்தில் கடந்த மூன்று நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எதிர்பார்க்காத அளவுக்கு தீவிரமாக அதிகரித்துள்ள நிலையில் இன்று(04/03/21) மாலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நடைமுறை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து வருகின்ற மார்ச் 7,2021 ஞாயிற்றுக்கிழமை முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வரும்,மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த பகுதிநேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். இந்த புதிய முடிவு அடுத்த ஒருமாத காலம் நடைமுறையில் இருக்கும்.
அதே நேரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒரு மாதகாலமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையம் ,சாலுன்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பிற நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மார்ச்-7 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலை 5 முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மாதத்தின் இறுதியில்(பிப்ரவரி-22) சுகாதரத்துறை பகுதிநேர ஊரடங்கு விதிக்க வேண்டும் என்று அமைச்சரவைக்கு வேண்டுக்கோள் விடுத்திருந்த நிலையில் அந்த நேரத்தில் ஊரடங்கு தேவையில்லை என்று அமைச்சரவை அதை நிராகரித்தது. இந்நிலையில் இரண்டு வாரங்கள் இடைவெளிக்கு பிறகு அமைச்சரவை ஊரடங்கு விதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.