குவைத்தில் பயணிகள் முனா அமைப்பு மூலம் மட்டுமே நுழைய முடியும்;மார்ச்-25 முதல் புதிய விதிமுறை நடைமுறையில் வருகின்ற என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அளித்துள்ளது
குவைத்தில் பயணிகள் முனா அமைப்பு மூலம் மட்டுமே நுழைய முடியும்;மார்ச்-25 முதல் புதிய விதிமுறை நடைமுறையில்
குவைத்தில் MUNA வலைதளம் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில இருந்து வழங்கபடும் பி.சி.ஆர் சான்றிதழை பயன்படுத்தி மட்டுமே பயணிகள் நுழைய முடியும் எனவும் இதற்கான முதல்கட்டமாக 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் சற்றுமுன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Image : PAGE-1
இதையடுத்து இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், அமீரகம், நேப்பாளம், பங்காளதேஷ், பஹ்ரைன்,துருக்கி ஆகிய நாட்டினர் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் இருந்து 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை சான்றிதழ்கள் பெற்று குவைத்தில் நுழைய முடியும். மேலும் இப்படிப்பட்ட சான்றிதழுடன் வருகின்ற பயணிகளின் சுகாதார விவரங்கள் முனா அமைப்பு மூலம் விமான நிலைய அதிகாரிகள் சரிபார்க்கும் நேரத்தில் ஒன்றி(match) போனால் குவைத்துக்குள் நுழைய அனுமதி வழங்கபடும்.மேலும் அந்த சுற்றறிக்கையில் பயணிகள் காய்ச்சல், சளி, தும்மல், இருமல் போன்ற பிரச்சனைகள் இல்லாத நபராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய உத்தரவு உள்ளூர் நேரப்படி 25/03/2021(வியாாழக்கிழமை)அதிகாலை 00:01 மணிமுதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், வெளிநாட்டினர் நுழைவுத்தடை நடைமுறையில் இருக்கும் என்று டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.
Image : PAGE-2