அபுதாபியில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணங்கள் குறைக்கப்பட்டன என்ற புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது
அபுதாபியில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணங்கள் குறைக்கப்பட்டன;புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
அபுதாபி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கோவிட் -19 தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனையை நடத்துவதற்கான கட்டணம் 65 திர்ஹாம்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே இன்று முதல் பரிசோதனைக்காக செல்லும் நபர்கள் இதை அறிந்திருப்பது நல்லது உங்கள் நண்பர்களுக்கு பகிர்வு செய்து உதவலாம், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை.
இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் தலைநகரில் உள்ள பல அரசு மருத்துவமனை, தனியார் கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றன. பி.சி.ஆர் பரிசோதனை வசதிகள் அபுதாபி முழுவதும் பல டிரைவ்டூ ஸ்கிரீனிங்(Drive Screening) மையங்களிலும் கிடைக்கும். ஆனால் இதுவரை பணம் செலுத்தி பண்ண வேண்டிய கோவிட் -19 ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை கட்டணமாக 85 திர்ஹாம் அபுதாபியில் செலுத்தப்பட வேண்டியிருந்த நிலையில் கட்டணம் குறைக்கப்பட்டது என்ற ஆறுதலான செய்தி வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து வரும் நாட்களில் அமீரகத்தின் மற்ற எமிரேட்களிலும் பரிசோதனைக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.