ஓமானில் நுழையும் வெளிநாட்டினரை தொடர்ந்து அவர்களின் குழந்தைகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன
குடும்பத்துடன் ஓமானுக்கு வரும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) கட்டாயமாகும் என்று ஓமானில் இருந்து சற்றுமுன் அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான நிபந்தனை குறித்து அதிகாரிகள் இன்று(27/03/21) சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தனியாக ஓமானுக்கு பயணம் செய்தால், தனிமைப்படுத்தலை வீட்டிலேயே முடிக்க வேண்டும். மேலும் பெற்றொருடன் வருகின்ற நிறுவன தனிமைப்படுத்தலின் ஏழு நாட்கள் பூர்த்தி செய்த 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பி.சி.ஆர் பரிசோதனை எட்டாம் நாளில் நடத்த வேண்டும் என்று ஓமான் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Image credit: Official Soure
இதுபோல் 16-வயதிற்கு உட்பட்ட வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு சுகாதார காப்பீடு தேவை. மேலும் குழந்தைகள் குடும்பத்துடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சஹாலா செயலி வழியாக ஹோட்டல் தனிமைப்படுத்தலை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. வருகின்ற 29-முதல் நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சஹாலா செயலி வழியாக ஹோட்டல் தனிமைப்படுத்தலை முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற 29-முதல் நாட்டில் நுழையும் வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை இங்கே அறியலாம் Click: https://www.arabtamildaily.com/2021/03/hotel-bookings-to-be-made-via-sahala-platform.html