குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு நேரம் குறைப்பு உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியாகியுள்ளது
Image : அரசாங்க செய்தி தொடர்பாளர்
குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு நேரம் குறைப்பதற்காக அறிவிப்பு
குவைத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பகுதிநேர ஊரடங்கு நேரம் குறைப்பு உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ரிம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து நாளை(23/03/21) செவ்வாய்கிழமை முதல் மாலை 6:00 முதல் காலை 5:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும். தற்போது இது மாலை 5:00 முதல் காலை 5:00 வரையில் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையில் நாளை முதல் மாற்றம் வருகின்றன.
இதுபோல் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளிட்டவை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும், வீட்டு விநியோக சேவை நடைமுறையில் இருக்கும். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் இரண்டு மணி நேரம் குடியிருப்பு பகுதிகளில் நடக்க(உடற்பயிற்சி) அனுமதிக்கப்படுவார்கள்.இந்த நேரத்தில் வாகனங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை