குவைத்தில் மீண்டும் பள்ளிக்கூடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும்,அதுபோல் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
குவைத்தில் மீண்டும் பள்ளிக்கூடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
குவைத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் படிப்படியாக திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர்.பைசல்-அல்-சபா தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும். நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் நம்பப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை, நாட்டில் 401,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்,இதில் பாதி அளவுக்கு குடிமக்களில் உள்ள வயதானவர்களும், வயதான வெளிநாட்டவர்களில் நான்கில் ஒரு பங்கும் அடங்குவர். புனித ரமலான் மாதத்தின்(மே நடுப்பகுதியில்) கடைசியில் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் கடக்கும் எனவும் செப்டம்பர் மாதத்திற்குள் நோய்த்தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று அமைச்சர் மேலும் கூறினார். இதேபோல் கூட்டுறவு கடைகள்,முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும் என்றார். அதே நேரத்தில், ரமலானுக்குப் பிறகு தடுப்பூசி போடப்பட்டவர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் வேலை செய்யும் உரிமையாளர்களின் கடைகள் மூடப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.