துபாயில் இருந்து வந்த பயணியின் 48 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம் சுங்கத்துறை அதிகாரியால் அடித்து நொறுக்கப்பட்டது;கடிகாரத்தில் எவ்வளவு தங்கம் கடத்த முடியும்.....???
Image credit: Damaged Watch with Passenger
துபாயில் இருந்து வந்த பயணியின் 48 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம் சுங்கத்துறை அதிகாரியால் அடித்து நொறுக்கப்பட்டது
துபாயில் இருந்து வந்த ஒரு பயணியின் மதிப்புமிக்க கடிகாரம் சுங்க அதிகாரிகளால் தங்கக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடிகாரம் இப்படி அடித்து நொறுக்கப்பட்டதாக மங்களூரை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற பயணி தெரிவித்தார். இது தொடர்பாக மலபார் மேம்பாட்டு மன்றத் தலைவர் கே.எம்.பஷீர் இந்த சம்பவத்தை பேஸ்புக் லைவில் பதிவிட்டுள்ளார். 48 லட்சம் மதிப்புள்ள 'AUDEMARS PIGUET' நிறுவனத்தின் அரியவகை கடிகாரம் இப்படி அடித்து நொறுக்கப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1952 இல் கரிபூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இஸ்மாயில் வந்திறங்கினார்.
இஸ்மாயிலுக்கு அவரது சகோதரரால் எட்டு வருடங்களுக்கு முன்பு இந்த கை கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது, ஒவ்வொரு முறையும் தாயகம் வந்து செல்கின்ற நேரத்தில் என்றால் பயணத்தின் போது அவர் இந்த கடிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் எம் பஷீர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், சுங்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், ஒரு கடிகாரத்தில் எத்தனை கிலோ தங்கத்தை கடத்த முடியும்? எம் பஷீர் லைவ் வீடியோவில் கேட்டுள்ளார். கடிகாரத்தில் தங்கம் கடத்தப்படுவதாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை ஆய்வு செய்ய நிபுணர்களை அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இஸ்மாயிலுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை வழக்கு தொடரப்படும் எனவும், கரிபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி விமான நிலைய சுரங்கத்துறை கண்காணிப்பாளர் அதிகாரியிடம் புகார் அளித்தனர் என்று அவருடன் வந்த வழக்கறிஞர் கே.கே முகமது தெரிவித்தார்.