சவுதியில் வெளிநாட்டவர்கள் இனி இகாமாவை எடுத்துச் செல்ல வேண்டாம்;டிஜிட்டல் இகாமா கைவசம் இருந்தால் போதும் என்று ஜவாசத் இயக்குநரகம் தெரிவித்துள்ளது
Image credit: Digital Iqama Model
சவுதியில் வெளிநாட்டவர்கள் இனி இகாமாவை எடுத்துச் செல்ல வேண்டாம்;டிஜிட்டல் இகாமா கைவசம் இருந்தால் போதும்
சவுதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 'டிஜிட்டல் இகாமா' சேவை நடைமுறைக்கு வந்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான இகாமா(வேலை அனுமதிப்பத்திரம்) ஞாயிற்றுக்கிழமை முதல் டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்க துவங்கவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வெளிநாட்டவர்களுக்கு அமைச்சக சேவைகளை வழங்க இந்த புதிய டிஜிட்டல் இகாமா அமைப்பு உதவும் என்று ஜவாசத் இயக்குநரகம் ஜெனரல் கூறினார்.
டிஜிட்டல் இகாமாவில் அச்சிடப்பட்ட கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களின் முழு விவரங்களையும் அறிய முடியும்.இந்த இகாமாவை அப்சீர் மூலம் பதிவிறக்கம் செய்தால் இன்டர்நெட் இல்லாத நேரத்திலும் கூட இணை பயன்படுத்தலாம். இகாமாவின் அசல் நகல் உங்களிடம் இல்லையென்றாலும், பாதுகாப்புப் அதிகாரிகள் சோதனையின் போது இனிமுதல் டிஜிட்டல் இகாமாவைக் காட்டினால் போதுமானதாக இருக்கும்.
அண்ட்ராய்டு / ஆப்பிள் கைப்பேசியில் அப்சீர் தனிநபர்கள் பயன்பாட்டு செயலியை(Playstore Application) பதிவிறக்கி செய்து பின்னர் உள்நுழைக,அதில் எனது சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் டிஜிட்டல் இகாமாவைப் பதிவிறக்கலாம். பக்கத்தின் கீழே பதிவிறக்கம் செய்யப்பட்ட குடியுரிமை ஐடியைக் கிளிக் செய்வதன் மூலம் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம். சமீபத்தில், ஜவாசத் இயக்குநரகம் ஒரு டிஜிட்டல் அடையாள அட்டையை சவுதி குடிமக்களுக்கு வழங்கியது. டிஜிட்டல் ஐடி என அழைக்கப்படும் இந்த சேவையின் மூலம் சவுதி நாட்டவர்கள் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை தவிர்க்க முடிந்தது. ஆன்லைன் சேவையான அப்ஷீர் பல்வேறு அரசு துறைகளுக்கு இடையில் திறம்பட முன்னர் உள்ளதை விட விரைவாக செயல்படுத்த முடியும் விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.