சவுதி அரேபியாவுக்கு மே-17 முதல் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது;இது தொடர்பான தகவல் மாலையில் வெளியாகியுள்ளது
Image : Saudi International Airport
சவுதி அரேபியாவுக்கு மே-17 முதல் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
சவுதி அரேபியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே-17 அன்று அதிகாலையில் 1 மணிக்கு நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு சவுதி ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று சவுதியின் விமானப் போக்குவரத்து துறை GACA வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அனைத்து சர்வதேச விமான சேவைகளுக்கான தடையும் மே-17 அன்று நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் சவுதி குடிமக்கள் மே- 17 முதல் நாட்டை விட்டு வெளியேறவும், நாடு திரும்பவும் அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினத்தில் இருந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் முழுமையாக செயல்படும். அனைத்து சர்வதேச விமானங்களுக்கான தடையும் நீக்கப்படும். ஆனால் கோவிட் பரவுவதைக் கருத்தில் கொண்டு நாட்டின் சுகாதர நிலைமையினை கண்காணிப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள எந்த நாட்டிற்கும் இந்த புதிய முடிவு பொருந்தாது என்றும் சவுதி ஏர்லைன்ஸ் இன்று(11/03/21) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுபோல் இந்த புதிய முடிவுக்கு மே-17 வரை என்ற நீண்ட இடைவெளி உள்ளத்தால் கொரோனா நோய்தொற்று குறையும் நாடுகளை தடைப் பட்டியலிலிருந்து நீக்கவும் வாய்ப்புள்ளது.இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.