BREAKING NEWS
latest

Tuesday, March 23, 2021

குவைத்தில் செவிலியர் வேலைக்கு அதிக பணம் வசூலித்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் சொத்துகள் பறிமுதல்

குவைத்தில் செவிலியர் வேலைக்கு அதிக பணம் வசூலித்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் சொத்துகளை குற்றவியல் அமலாக்கத்துறை கண்டறிந்தது பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

குவைத்தில் செவிலியர் வேலைக்கு அதிக பணம் வசூலித்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் சொத்துகள் பறிமுதல்

குவைத்திற்கு செவிலியர் வேலைக்கு பல மடங்கு தொகையினை கட்டணமாக வசூலித்து வேலைகளை வாங்கி வழங்கிய வழக்கு தொடர்பாக Mathew International Recruiting Agency-யின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன எனவும்,இதன் மதிப்பு ரூ.7.5 கோடிகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இந்த சொத்துகளை குற்றவியல் அமலாக்கத்துறை கண்டறிந்தது பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் வெளியிட்டுள்ள செய்தியில் நிறுவனத்தின் உரிமையாளர்களான பி.ஜே.மேத்யூ,செலின் மேத்யூ மற்றும் தாமஸ் மேத்யூ ஆகியோரின் சொத்துக்களே பறிமுதல் செய்யப்பட்டவை என்றும், கேரளா,தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 900 ற்கும் மேற்பட்ட செவிலியர்களை 20,000 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டிய இடத்தில் 20,00000 வரையில் கட்டணமாக வசூலித்தது நியமனங்கள் செய்யப்பட்டன. இந்த முறையில் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.205 கோடி பணத்தை குவைத்துக்கு ஹவாலாவாக அனுப்பப்பட்டதை குற்றவியல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குவைத் சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு செவிலியர்களை வேலைக்கு சேர்ப்பதில் பல கோடி ரூபாய் மோசடி செய்தனர் என்பதே இந்த வழக்கு விசாரணைக்கு காரணமாக அமைந்தது.

Add your comments to குவைத்தில் செவிலியர் வேலைக்கு அதிக பணம் வசூலித்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் சொத்துகள் பறிமுதல்

« PREV
NEXT »