BREAKING NEWS
latest

Wednesday, March 24, 2021

ஷேக் முகமது அவர்களின் சகோதரரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார்

ஷேக் முகமது அவர்களின் சகோதரரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image credit: Gulf News

ஷேக் முகமது அவர்களின் சகோதரரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார்

துபாயின் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார்.ஷேக் ஹம்தான் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் சகோதரர் ஆவார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்த நிலையில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது.ஷேக் முகமது அவர்கள் தன்னுடைய சகோதரர் இறந்த செய்தியை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் அறிவித்தார்.

ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் இரண்டாவது மகன். ஷேக் ஹம்தான் அவர்கள் டிசம்பர் 25,1945 இல் பிறந்தார். ஷேக் ஹம்தான் பின் ரஷீத் 1971 ஆம் ஆண்டு டிசம்பர்9-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டதிலிருந்து நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசாங்க செலவினங்கள் உள்ளிட்டவை வளர்ச்சி அடைய செய்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹம்தான் அவர்கள் மறைவயோட்டி இன்று(24/03/21) புதன்கிழமை துவங்கி துபாயில் 10 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்கு ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி அமைச்சகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது, இதுபோல் அமீரக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாட்டின் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். துபாயில் உள்ள அரசுத்துறைகள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களில் உள்ள அனைத்து வேலைகளும் வியாழக்கிழமை(நாளை) முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும், மேலும் கோவிட் பரவலை தொடர்ந்து நல்லடக்கம் மற்றும் அது தொடர்பான பிரார்த்தனை நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்ரிப் தொழுகையின் பின்னர் இன்று மறைந்த ஷேக் ஹம்தானுக்கான பிரார்த்தனைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மசூதிகளில் நடைபெறும் என்று அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

Add your comments to ஷேக் முகமது அவர்களின் சகோதரரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார்

« PREV
NEXT »