குவைத்தில் வெட்டுக்கிளிகள்;எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களுக்கு அறிவுத்தல் செய்துள்ளது
Image: குவைத்தில் வெட்டுக்கிளி பரவியுள்ள காட்சி
குவைத்தில் வெட்டுக்கிளிகள்;எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுத்தல்
குவைத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(24/03/21) மதியம் முதல் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் விஷமாக இருப்பதால் அவற்றை வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் சாப்பிட வேண்டாம் என்றும் விவசாய விவகாரங்கள் மற்றும் மீன் வளங்களுக்கான பொது ஆணையம் (PAAFR) எச்சரித்துள்ளது.மேலும் இவற்றை அழிக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இதை கண்டால் வீடியோ கிளிப் அல்லது புகைப்படம் எடுத்து Wafra பகுதியில் உள்ளவர்கள் 50314455 என்ற WhatsApp எண்ணுக்கும், பிற பகுதியில் உள்ளவர்கள் 97982998 WhatsApp எண்ணுக்கும் Location உடன் சேர்த்து அனுப்புமாறு சம்பந்தப்பட்ட துறை வேண்டுக்கோள் விடுத்துள்ளது.