BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

வெளிநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில் 10-ல் ஒருவர் தமிழர்;இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் தகவல்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில் 10-ல் ஒருவர் தமிழர்;இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் அவர்கள் பாராளுமன்றத்தில் இதை தெரிவித்துள்ளார்

Image : File Photo

வெளிநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில் 10-ல் ஒருவர் தமிழர்;இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் தகவல்

இந்தியாவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றவர்களில் மாநிலவாரியாக பார்வையில் தமிழகம் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் தெரியவந்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்கள் பாராளுமன்றத்தில் கடந்த 24-ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின்படி தமிழகத்தில் இருந்து கடந்த ஜனவரி 2016 முதல் இந்த மாதம் மார்ச்-18,2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கும் இடையிலான  காலகட்டத்தில் 13,010,00 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில் நாட்டிலேயே அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற மாநிலத்தவர்களில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் முதல் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில். ஜனவரி,2016 தொடக்கம் முதல் மார்ச்-18,2021 ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 1.3 கோடி பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும், இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 19 லட்சம் பேர் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 13.1 லட்சம் பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ள மொத்த தொழிலாளர்களில் கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட இரு மாநிலங்களில் இருந்து மட்டுமே சென்றுள்ள தொழிலாளர்கள் விகிதம் 24 சதவீதமாக உள்ளது. 3-வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் அங்கிருந்து 12.6 லட்சம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதே போல 44.3 லட்சம் பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா காலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4.7 லட்சம் பேர் தமிழகத்திற்கு திரும்பியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add your comments to வெளிநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில் 10-ல் ஒருவர் தமிழர்;இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் தகவல்

« PREV
NEXT »