சவுதியில் நாய்கள் கடித்து குதறியதில் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த குழந்தை
சவுதியில் நாய்கள் கடித்து குதறியதில் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
சவுதி நாய்கள் கடித்து குதறியதில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ரியாத் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள Al-Washala பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. இந்த துயரமான சம்பவம் குறித்த செய்தியை சவுதி பத்திரிக்கைகள் இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக்கு ரியாத்தின் மேயர் உத்தரவிட்டார். குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பதற்காக தங்கள் வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு குழந்தையுடன் சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமி தங்கியிருந்த ஓய்வு இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது ஐந்து நாய்களால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.
குழந்தையினை காணாமல் தாய் தேடி வெளியே சென்றபோது,குழந்தை நாய்களால் தாக்கப்படுவதைக் கண்டார். தன் மகளை காப்பாற்ற உதவிக்காக கூக்குரலிட்டார். இதையடுத்து சுற்றியுள்ளவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தர்கள் நாய்களை துரத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சில மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி சவுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து 72 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ரியாத் மேயர் இளவரசர் பைசல் பின் அப்துல் அஜீஸ் உத்தரவிட்டுள்ளார். இதனை பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கபடும்.