இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(டிஜிசிஏ) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஏப்ரல் 30-வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக உள்ள விமானங்கள் மற்றும் சிறப்பு அனுமதி அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள விமானங்களின் சேவைகள் நடத்த இதன் மூலம் எந்த தடையும் இல்லை. தற்போது 27 நாடுகளுடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள Air Bubble ஒப்பந்தத்தின் அடிப்படையில் 27 நாடுகளுக்கு மட்டுமே விமான சேவைகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் அடிப்படையில் வளைகுடா,அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச்-23,2020 அன்று முதல் சர்வதேச விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுபோல் உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு இறுதியில் விலக்கப்பட்டு,சேவைகள் மீண்டும் தொடங்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.