சவுதி பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்திய செலியர்கள் உடல்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது;அதிகாலையில் உடல் கொச்சி சென்றடையும்
Image : உயிரிழந்த சுபி மற்றும் அகிலா
சவுதி பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்திய செலியர்கள் உடல்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது
சவுதி Taif அருகே கடந்த பிப்ரவரி-28 அன்று மினி பஸ் கவிழ்ந்த ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் இந்திய செவிலியர் மற்றும் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்த செய்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தளத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த செவிலியர்களான அகிலா மற்றும் சுபி ஆகியோரின் உடல்கள் இன்று(16/03/21) காலையில் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இவர்கள் ரியாத்தை தலைமையிடமாக அல் அடால் நிறுவனத்தின் கீழ் செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர். மேலும் இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த செவிலியர்களும் படுகாயமடைந்தனர்.
கேரளா கொல்லம் ஆயுரைச் சேர்ந்த சுபி(வயது-33) மற்றும் கோட்டயம் வைகம் பகுதியை சேர்ந்த அகிலா முரளி(வயது-29) ஆகியோரின் உடல்கள் இன்று அதிகாலை 1.40 மணிக்கு ஜித்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து Etihad Airways விமானத்தில் எடுத்துச்செல்ல உடல்கள் அபுதாபி வழியாக கொச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரின் உடல்கள் புதன்கிழமை(நாளை) அதிகாலை 1.20 மணிக்கு கொச்சியை விமான நிலையத்தை அடைந்து உறவினர்களால் வீட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படும். இந்த விபத்தில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த பஸ் டிரைவர் முகமது காதர் அவர்கள் உடல் முன்னரே அல்மோயா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய அனைவருமே கடநத பிப்ரவரி-3 ஆம் தேதி இந்தியாவில் இருந்து ரியாத்தை வந்தடைந்தனர். அவர் தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர் ஜித்தாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனத்தில் டிரைவர் உட்பட எட்டு பேர் பேருந்தில் இருந்தனர். உயிரிழந்த 3 பேரை தவிர மீதமுள்ள ஐந்து நபர்களில் படுகாயமடைந்த 3 செவிலியர்களில் கேரளாவை சேர்ந்த அன்சி Taif கிங் பைசல் மருத்துவமனையிலும், தமிழகத்தை சேர்ந்த குமுதா மற்றும் ரோமியா ஆகியோர் Taif கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் லேசான காயமடைந்த கேரளாவை சேர்ந்த பிரியங்கா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வஜிதா ரியாஸ் ஆகியோர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பினர்.