குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : Official Soure
குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கவில்லை
குவைத்தில் புனித ரமலான் மாதத்தின் இறுதி வரையில் தற்போதைய ஊரடங்கு தொடர்வது(நீட்டிப்பு) தொடர்பாக நேற்று(30/03/21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கவில்லை எனவும், தற்போதைய நிலைமையை மதிப்பிட்ட பிறகு, ஏப்ரல் 8-க்குள் இறுதி முடிவை எடுக்க நேரம் உள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கொள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அதிகரிப்பு அல்லது குறைவு, அத்துடன் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வருகின்றன பாதுகாப்பு நடவடிக்கைள் ஆகியவற்றின் அடிப்படையில் தடையை ரத்து செய்வது அல்லது நீட்டிப்பதற்கான முடிவுகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.