இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது; ஒருபோதும் விமானத்தில் பயணிக்க முடியாதபடி தடை விதிக்கப்படும்
Image : Delhi Airport
இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் டி.ஜி.சி.ஏ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் அடிப்படையில் பயணிகள் விமான பயணத்தின் போது சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், இதில் முக்கியமாக சரியான முறையில் முகக்கவசம் அணியுமாறு அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளை போன்று இந்தியாவிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து உள்ள நிலையில் புதிய உத்தரவை சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ளது.
சரியான பாதுகாப்பு முககவசம் இல்லாமல் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்காக அனுமதி மறுக்கப்படும் எனவும், விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் எனவும்,முககவசம் மூக்கின் கீழ் அணிவதை ஒருபோதும் அனுமதிக்கபடாது எனவும், இதுபோல் முககவசம் இல்லாமல் வரும் பயணிகளை விமான நிலையங்கள் உள்ளே நுழைய அனுமதிக்காது எனவும்,பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் பயணிகள் மீது பாதுகாப்பு அதிகாரிகளால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், இதுபோல் விமானம் புறப்பட்ட பிறகு முககவசம் சரியாக அணியாதவர்களை விமானத்தில் தவறாக நடத்துக்கொண்ட பயணிகளின் பட்டியலில சேர்க்கலாம் என்றும், இதையடுத்து அவர்கள் ஒருபோதும் விமானத்தில் பயணிக்க முடியாதபடி தடை விதிக்கப்படும் எனவும் டி.ஜி.சி.ஏ வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணத்தின் போது பலமுறை அறிவுத்தல் செய்ய பிறகும் சக பயணிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் சில பயணிகள் முககவசம் அறியாமலும்,சரியான சமூக இடைவெளியினை கடைபிடிக்காமலும் நடந்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் புதிய உத்தரவை இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் டி.ஜி.சி.ஏ வெளியிட்டுள்ளது.