பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களுக்கு கோவிட் உறுதியாகியுள்ளது;அவரை சந்தித்த குவைத் வெளியுறவு துறை அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டார்
Image : அமைச்சர் இம்ரான்கானுடன் சந்திப்பு நடத்திய போது
பாகிஸ்தான் பிரதமருக்கு கோவிட்;அவரை சந்தித்த குவைத் வெளியுறவு துறை அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்-அவர்களுக்கு இன்று(20/3/2021) சனிக்கிழமை மாலையில் கோவிட் உறுதிப்படுத்தியதை அந்நாட்டு செய்தித்துறை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அகமது அல் நாசர் அல் சபா அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணமாக ஷேக் அகமது அல் நாசரும் அவரது குழுவும் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்று இருந்த நிலையில், இன்று காலை மீண்டும் குவைத்திற்கு வந்தடைந்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களுக்கு கோவிட் உறுதிசெய்ய பட்டதை தொடர்ந்து, குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அல் சபா மற்றும் அவருடன் சென்றிருந்த துணை அமைச்சர் மற்றும் குழுவினர் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் குழுவினர் புதன்கிழமை அன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தனர். இந்த சுற்று பயணத்தின் போது, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இணையமைச்சர் முரளிதரன் மற்றும் குவைத்திற்கான இந்திய தூதர் உள்ளிட்ட அனைவருடனும் சந்திப்பு நடத்திய பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டு சென்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களை சந்தித்து விட்டு இன்று காலையில் குவைத் திரும்பிய நிலையில், அந்நாட்டு பிரதமருக்கு கோவிட் உறுதியான செய்தி வெளியாகியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் தான் இம்ரான்கான் அவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.