குவைத்துக்கான பணி ஒப்பந்தத்தை பிலிப்பைன்ஸ் கடினமாக்கியது;புதுரக மொபைலை ஸ்பான்சர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது
குவைத்துக்கான பணி ஒப்பந்தத்தை பிலிப்பைன்ஸ் கடினமாக்கியது;புதிய நிபந்தனைகளை ஏற்க பேச்சுவார்த்தை
குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் பிரதிநிதிகள் புதிதாக வீட்டுப் பணியாளர்களை தங்கள் நாட்டிலிருந்து அழைத்துவர குவைத் Domestic Workers Federation அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளி மற்றும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தில் மேலும் புதிதாக சில விதிமுறைகள் சேர்ப்பது குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக தூதரக பிரதிநிதிகள் கூறுகையில் நவீன மொபைல் போனை பணியாளர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் மற்றும் அதை ஸ்பான்சரே தொழிலாளிக்கு வாங்கி வழங்க வேண்டும்,மேலும் அந்த தொகையை தொழிலாளியின் சம்பளத்திலிருந்து கழிக்கக்கூடாது. மேலும் உரிமையாளரின்(Sponsore) பெயரில் நிலுவையில் வீட்டுப் பணியாளர் தொடர்பான வழக்குகள் அல்லது வேலைவாய்ப்பு பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் ஆணவத்தை தொழிலாளியை அழைத்துவரும் Sponsore சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை முன்வைத்து உள்ளனர்.முன்னதாக, தங்கள் நாட்டின் வீட்டுத் தொழிலாளர்களை துன்புறுத்தியது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கவில்லை என்பது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்த நிலையில் தொழிலாளர்களை குவைத்துக்கு அனுப்ப பிலிப்பைன்ஸ் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.