அமீரகத்தில் பலத்த தூசி காற்று வீசுகிறது; சாலைகளில் மணல் பல அடிக்கு திட்டுக்களாக படிந்துள்ளது:ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
அமீரகத்தில் பலத்த தூசி காற்று வீசுகிறது; சாலைகளில் மணல் பல அடிக்கு திட்டுக்களாக படிந்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று(21/03/21) ஞாயிற்றுக்கிழமை ஏற்படக்கூடிய பலத்த தூசிக் காற்று குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்களை எச்சரித்துள்ளது. காற்று மணிக்கு 50 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவுநிலையை(தூரப்பார்வை) பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் Yellow எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையில், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் எனவும் ,இது ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் அலைகள் ஆறு அடி உயரம் வரை எழும்பலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது