குவைத் விமான நிலையம் மீண்டும் திறப்பது, சுகாதாரத்துறை எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்
Image : இயக்குனர் அப்துல்லா அல்-ராஜி
குவைத் விமான நிலையம் மீண்டும் திறப்பது, சுகாதாரத்துறை எடுக்கப்பட வேண்டிய முடிவு
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவது சுகாதாரத்துறையின் முடிவை பொறுத்தது என்று குவைத் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் அப்துல்லா அல்-ராஜி கூறியுள்ளார். கொரோனா வழக்குகளின் எண்ணிக்கைய குறைந்து,நாட்டின் சுகாதார நிலைமை சீராக்கும் முறைக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தால் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கோவிட் நெருக்கடி தொடங்கியது முதல் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு(2020) 75 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 11.57 மில்லியன் பயணிகள் குறைந்துவிட்டனர். 2019-ஆம் ஆண்டில் குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை சுமார் 15.448 மில்லியன் பயணிகள். இவர்களில் 7.715 மில்லியன் பேர் குவைத்துக்கு வந்தனர் மற்றும் 7.733 மில்லியன் பயணிகள் குவைத்தில் இருந்து வெளியேறிய நபர்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விமான நிலையம் வழியாக பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 2020-யில் 3.875 மில்லியனாக குறைந்துவிட்டது. இவர்களில் 1.835 மில்லியன் பேர் குவைத்துக்கு வந்தனர் மற்றும் 2.039 மில்லியன் பயணிகள் இங்கு சென்றுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.