ரமலான் நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது நோன்பை முறிக்காது;அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது நோன்பை முறிக்காது;அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
ரமலானில் நாட்களில் பகல் காலங்களில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தவறில்லை என குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ஃபத்வா அதிகார சபையின் பொது விவகாரக் குழு கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. வளர்ந்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக சுகாதார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி பிரச்சாரம் தொடர்பாக அமைச்சகத்தின் துணை செயலாளரால் 'நோன்பு காலங்களில் பகலில் தடுப்பூசி எடுப்பது, நோன்பை முறிக்குமா....? முறிக்காதா....? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் தரப்பட்டுள்ளது.
மேலும் நோன்பு கடைபிடிப்பதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதன் தாக்கம் மேலும் ஆதிகரிக்கும் என்றோ அல்லது பாதிப்பு குறைய காலதாமதம் ஆகும் என்றோ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றோ பயம் ஏற்படுமானல் அந்த நபர் நோன்பை முறித்துக்கொள்ள இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.