குவைத் வருபவர்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது
குவைத் வருபவர்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம்
குவைத் வருபவர்களில் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தலில்(Institutional Quarantine) இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுப்பதற்காக வாய்ப்புகள் அதிகம் எனவும்,அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
தற்போது, வெளிநாட்டவர்கள் குவைத்துக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை திரும்பப் பெறப்படும்போது, நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டவர்கள் நேரடியாக குவைத்துக்குள் நுழைய முடியும். அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் இரண்டு வாரங்களுக்கும் மற்றவர்களுக்கு ஒரு வாரமும் என்ற விதிமுறை பின்பற்றுகின்றன. ஆனால் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்த கட்டுபாட்டில் இருந்து விலக்கு அளிப்பதே புதிய தீர்மானமாக இருக்கும்.தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னரே இது தொடர்பான கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Search_tags