ஈரானில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 4 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது
ஈரானில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 4 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆண்களுக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் "போர்டல்" இன்று திங்கட்கிழமை(15/03/21) தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையின் கூற்றுப்படி தூக்கிலிடப்பட்ட நான்கு பேரும் கடந்த ஆண்டு நாட்டின் வடகிழக்கு ஃப்ரீமேன்றை அடுத்த ஸ்ஃபிட் சாங்கில் பகுதியில் இரண்டு மலையேறும் நபர்களை கடத்தி, கணவனைக் கட்டிப்போட்டு மனைவியை 4 பேரும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து நடந்த குற்ற விசாரணையில் இறுதியில மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, வடகிழக்கு ஈரானின் மஷாத்தில் உள்ள மத்திய சிறையில் வைத்து இன்று(திங்கள்கிழமை) நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர் என்று செய்தி செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானில் கொலை, கற்பழிப்பு, துப்பாக்கி முனையில் கொள்ளை, மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோல் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் வழக்குகளிலும் குறிப்பாக விரைவாக விசாரனை முடிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்படி ஈரானில் தொடர்ந்து மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச விமர்சனங்களை அந்நாடு எதிர்கொண்டு வருகின்றன.