சவுதிக்கு வருகின்ற பயணிகள் தங்களிடம் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தால் சுங்கவரி செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
சவுதிக்கு வருகின்ற பயணிகள் தங்களிடம் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தால் வரி செலுத்த வேண்டும்
சவுதி அரேபியாவுக்கு பயணிப்பவர்கள் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, அப்படி நீங்கள் எடுத்துச்சென்றால் பெரிய தொகை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.பயணிகள் கைவசம் வைத்திருக்கும் 3,000 ரியால்களுக்கு மேல் மதிப்புமிக்க பொருட்களுக்கு இனிமுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம்,வான்வழி மற்றும் கடல் வழியாக நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். பயணிகள் கொண்டு செல்லக்கூடிய பொருட்களின் அதிகபட்ச மதிப்பு 3,000 ரியாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3,000 ரியாலுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு இப்போது சவுதியில் சுங்கவரி செலுத்த வேண்டும், பயன்படுத்தப்படாத புதிய பொருட்களுக்கே வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளுக்கு அவர்களுடன் எடுத்து வருகின்றன பொருட்கள் மற்றும் பணம் குறித்த விபரங்களை முன்கூட்டியே சவுதி சுங்கத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரசபை முன்பு உத்தரவிட்டிருந்தது. சுங்கத்துறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் இதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன.