குவைத்தில் இரண்டு தொழிலாளர்கள் தற்கொலை,ஒருவர் தீக்குளித்தும் மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை என்ற தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
குவைத்தில் இரண்டு தொழிலாளர்கள் தற்கொலை,ஒருவர் தீக்குளித்தும் மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை
குவைத்தின் Jahra சாலையில் Kabd பகுதியில் ஒருவர் உடல் எரிந்த நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.மேலும் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை அதிகாரிகள் பரிசோதித்தபோது, தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மிகவும் எரியக்கூடிய எரிபொருள் மற்றும் ஒரு பாட்டில் உள்ளிட்டவை கண்டுபிடித்தனர். முதலில் இது கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த நபர் தனக்குதானே தீ வைத்துக்கொண்டார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அந்த நபரின் உடல் கிடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைபேசியை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அவர் பணப்பிரச்சனை மற்றும் தனிப்பட்ட முறையிலான பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் உடல் கருகிய நிலையில் அடையாளமே தெரியாமல் இருந்த அந்த நபர் வங்காளதேச நாட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுபோல் 26 வயதான மற்றொரு காய்கறி வியாபாரியான இளைஞர் ஒரு துண்டை பயன்படுத்தி ஒரு மரத்தின் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இவர் தன்னுடைய அண்ணனுடன் சேர்ந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதையடுத்து தன்னுடைய தம்பியை காணவில்லை என்று தேடிவந்த அண்ணன் இது தன்னுடைய தம்பி என்பதை அடையாளம் கண்டார். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் தம்பி இருவருமே Bidoones என்பது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.