துபாயில் 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்;நேர்மையினை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது
Image : Dubai Police
துபாயில் 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்
துபாயில் கரீம் டாக்ஸி ஓட்டுநர் தனது காரில் ஒரு பயணி விட்டுச் சென்ற 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து நேர்மையான டாக்ஸி டிரைவர் ஆனார். துபாயில் பொதுமக்கள் பயன்படுத்த சேவையில் உள்ள கரீம் டாக்ஸி நிறுவனத்தின் கீழ் ஓட்டுநராக வேலை செய்யும் முகமது ரபீக் என்ற அந்த ஓட்டுநர் ஒரு பயணியை இறக்கிவிட்டு திரும்பும் வழியில் அதில் பயணம் செய்த பயணி மறந்து விட்டுச் சென்ற 9 லட்சம் திர்ஹம் பணத்தை கண்டார். இதையடுத்து அந்த பெரும் தொகையினை பர்-துபாய் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.
பர்-துபாய் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் சோரூர் அவர்கள் ரபீக்கின் நேர்மைக்காகவும், இவ்வளவு பெரிய தொகையை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும் பாராட்டினார். தொடர்ந்து ரபீக்கிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தன்னை கவுரவப்படுத்திய காவல்துறையினருக்கும் ரபீக் நன்றி தெரிவித்தார்.