அபுதாபியில் கட்டப்பட்டு வருகின்ற இந்து கோயில் 2023-யில் திறப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது என்று பொறியாளர் அசோக் கோண்டெட்டி தெரிவித்தார்
Image credit:The National(மாதிரி படம்)
அபுதாபியில் கட்டப்பட்டு வருகின்ற இந்து கோயில் 2023-யில் திறப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
அமீரகத்தின் அபுதாபி எமிரேட்ஸில் உள்ள அபுதா முரைக்காவில்(AbuMureikha) நடைபெற்று வருகின்றன இந்து கோயிலின் அடித்தள வேலைகள் ஏப்ரல் மாதம் நிறைவடையும். இந்தியாவில் முழுக்க முழுக்க செதுக்கப்பட்ட கற்சிற்பங்கள் அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டு இணைக்கப்படும். சிற்பங்கள் நிறுவுவது தொடர்பான பணிகள் மே மாதம் தொடங்கும். அடித்தளம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அபுதாபி பாப்ஸ் இந்து மந்திர் திட்ட பொறியாளர் அசோக் கோண்டெட்டி தெரிவித்தார். கோயிலின் அடித்தளம் தரையிலிருந்து 4.5 மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு நிலத்தடி அறைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கோவிலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு அமீரகங்களை குறிக்கும் ஏழு பெரிய கோபுரங்கள் காட்சி அளிக்கும். இந்த கோயிலின் கட்டுமானம் அனைத்தும் இந்தியாவின் பாரம்பரியத்தையும் அரபு உலகையும் பிரதிபலிக்கிறது.இந்த கோயிலின் தளம் 4500 கன மீட்டர் கான்கிரீட் கலவையால் ஆனது. அடித்தளத்தை வலுப்படுத்த மேலும் 3,000 கன மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 707 சதுர மீட்டர் பரப்பளவில் புராண கதைகளில் உள்ள சிற்பங்கள் நிறுவப்படும்.
12,550 டன் சிவப்பு கல் மற்றும் 5,000 டன் இத்தாலிய பளிங்கு கற்கள் ஆகியவை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும். மேலும் சிற்பங்கள் செதுக்குதல் தொடர்பான வேலைகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 2,000 கைதேர்ந்த சிற்பிகள் செய்து வருகின்றனர். அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கோயில் கட்டுமானத்திற்கான இடத்தை வழங்கினார் என்பது குறி்ப்பிடத்தக்கது. வருகின்றன 2023-க்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று சம்பந்தப்பட்ட கோவில் வடிவமைப்பு பணிகளை செய்து வருகின்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.