குவைத்தில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில் 10 மாத பெண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சோகமான செய்தி வெளியாகியுள்ளது
Image : புகைப்படம் பதிவுக்காக மட்டுமே
குவைத்தில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில் 10 மாத பெண்குழந்தை உயிருடன் மீட்பு
குவைத்தில் Hawally பகுதியில் கூட்டுறவு சங்க கிளைக்கு அருகே 10 மாத பெண் குழந்தை துணியில் சுற்றப்பட்டு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வழியாக சென்ற சிலர் குழந்தையை கண்டுபிடித்தனர். பின்னர் அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்துறை பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்து அந்த குழந்தையினை மீட்டு முபாரக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு பரிசோதனையில் குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இதில் தொடர்புடைய நபர்களை (பெற்றோர்களை) அடையாளம் காண்பதற்காக ஹவாலி சரக காவல்நிலையத்தில் இரகசிய பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணைகள் நடந்தி வருகின்றன. குழந்தையை யார் தூக்கி எறிந்தார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில், அதிகாரிகள் சங்கத்தின் அருகாமையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் முதல்கட்டமாக பரிசோதனை செய்து வருவதாக பாதுகாப்பு வட்டாரம் உறுதிப்படுத்தியது. இந்த குழந்தை சட்டத்திற்கு புறம்பாக பிறந்த குழந்தையா அல்லது வேறு எதாவது காரணத்தால் அங்கு வீசிச்செல்லபட்டதா என்ற காரணங்கள் தெரியவில்லை.
இதற்கிடைய 22-வயது குவைத் இளைஞர் ஒருவர் Kabd பகுதியில் தன்னுடைய வாகனத்தில் நெஞ்சில் பலமுறை குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார் என்ற மற்றோரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.