சவுதிக்கு செல்லும் வெளிநாட்டினருக்கு மேலும் பின்னடைவு;51,000 புதிய வேலை வாய்ப்புகள் குடிமக்களுக்கு ஒதுக்க முடிவு என்ற புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது
Image : Saudi Mall
சவுதிக்கு செல்லும் வெளிநாட்டினருக்கு மேலும் பின்னடைவு;51,000 புதிய வேலை வாய்ப்புகள் குடிமக்களுக்கு ஒதுக்க முடிவு
சவுதி அரேபியாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளில் உள்ளூர்மயமாக்கலை நடைமுறைப்படுத்த முடிவு செய்து மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அஹ்மத் பின் சுலைமான் அல் ராஜிஹி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மால்களின் நிர்வாகம் உள்ளிட்ட வேலைகள் சவுதி குடிமக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டுமே குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மேலாண்மை அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக மால்களில் இயங்கும் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் உள்ளூர்மயமாக்கலை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் மற்றும் முக்கிய மத்திய விநியோக சந்தைகளிலும் உள்ளூர்மயமாக்கல் அமல்படுத்தப்படும். இதற்கான சோதனைகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கும்.இந்த புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சவுதி பெண்கள் மற்றும் மற்றும் ஆண்களுக்கு 51,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இணங்காத வணிக நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உரிமையாளர்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.