மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது;வருகின்ற புதன்கிழமை முதல் உத்தரவு நடைமுறையில் வருகின்றன
மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கபடுகின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நாளை மறுநாள்(28/04/21) புதன்கிழமை முதல் உத்தரவு நடைமுறையில் வருகின்றன எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மரபணு மாற்றம் ஏற்பட்ட வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றன நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதரத்துறை பரிந்துரை அடிபடையில் தேசிய பாதுகாப்பு மையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நாடு எ தற்காப்பு துறை அமைச்சர் இசாக் சரபிநார் கூம் அறிவித்தார்.
மேலும் அறிக்கையில் இந்தியாவில் இருந்து வருகின்ற நபர்கள் மற்றும் இந்தியாலிருந்து மலேசியா வழியாக மற்ற இடங்களுக்கு செல்ல வருகின்றன பயணிகளுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும் எனவும், நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது . ஆனால் மலேசியா குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்தியாவில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் 14 நாட்கள் மலேசியா துறைமுகங்களில் நங்கூரம் இடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் அந்த கப்பல்களில் உள்ள மலேசிய பணியாளர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.