குவைத் விமான நிலையம்,குடிமக்களுக்கான தடுப்பூசி போட்டு முடியும் முறைக்கு திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது;ஜூலை மாதத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது
குவைத் விமான நிலையம்,குடிமக்களுக்கான தடுப்பூசி போட்டு முடியும் முறைக்கு திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத் நாட்டில் அண்மையில் கோவிட் பரவல் மற்றும் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும் வருகின்ற ஜூலை மாதத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் சுகாதரத்துறை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் விரைவில் அதிகமான தடுப்பூசிகளை நாட்டிற்க்கு வழங்குவதாக உறுதியளித்தால், தடுப்பூசியின் விநியோகம் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் நிலையில், கோவிட்க்கு எதிரான சமூகத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
குவைத்தில் குடிமக்களுக்கு இடையே கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முடிந்ததும், விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் கோவிட் -19 சோதனைகள் முடிவுகள் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் விபரங்கள் பெறுவதற்காக டிஜிட்டல் பயண அனுமதி இயங்குதளத்தின் ஆப்பிள் செயலி ஏப்ரல் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரமலான் துவங்குவதற்கு முன்னர் நாட்டில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை சுகாதரத்துறை அதிகாரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.