ஓமானில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால அறுவை சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்து தற்காலிக நிறுத்த சுகாதரத்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது
Image : Beautiful Oman
ஓமானில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால அறுவை சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்து தற்காலிக நிறுத்த முடிவு
ஓமானில் கோவிட் வைரஸ் பரவுதல் தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் சுகாதார அமைச்சகம் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிடுள்ளது. அவசரகால அறுவை சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்து மருத்துவ சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்துள்ள நேரத்தில் அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய உத்தரவு வருகின்ற ஏப்ரல்-11,2021 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும் செய்திக்குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மகப்பேறு பெண்களுக்கு அவசரகால அறுவைசிகிச்சை(Emergency Cesarean)செய்யவும் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.