சவுதி செல்வோர் இனிமுதல் இலங்கையினை தற்காலிக புகலிடமாக கொண்டு பயணிக்க முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
Image credit:Srilankan Airport
சவுதி செல்வோர் இனிமுதல் இலங்கையினை தற்காலிக புகலிடமாக கொண்டு பயணிக்க முடியும்
சவுதி அரேபியாவுக்குத் திரும்பும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்காக பஹ்ரைன்,நேபாளம் நாடுகளுக்கு அடுத்தபடியாக மேலும் ஒரு புதிய வழி திறந்து கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதவாது இனிமுதல் இந்தியர்கள் இலங்கை வழியாக சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் Air-Bubble ஒப்பந்தம் செய்யபட்ட நிலையில் இந்த புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்பு நீங்கள் இந்தியாவில் தங்கியிருக்கக்கூடாது என்று சவுதி அரேபியாவின் விதிமுறை ஆகும். எனவே ஏர் பப்பில் ஒப்பந்தம் தொடங்கியவுடன், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து இலங்கைக்கு விமான சேவை தொடங்கும். இதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி 14 நாட்கள் இலங்கையில் தங்கி சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியும். கடந்த பிப்ரவரியில் இந்திய உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக சவுதியில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை என்பது கூடுதல் தகவல், எனவே பட்டியலிடப்படாத எந்த நாடுகளிலும் 14 நாள் தங்கிய பிறகு, கோவிட் எதிர்மறை சான்றிதழுடன் சவுதி அரேபியாவுக்கு வருவதற்கு தடை இல்லை. தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்களை சார்ந்து இருக்கும் குடும்பத்தினர் அதிக எண்ணிக்கையில் இப்படித்தான் வருகிறார்கள். இந்தச் சூழலில்தான் வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய இலங்கை புதிய வழிகளைத் திறந்து தருகிறது. கொழும்பில் 14 நாட்கள் தங்கிய பின்னர் வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழையலாம்.