அமீரகத்தில் இந்தியரான தொழில் அதிபர் யூசுப் அலி அவர்களுக்கு சிவிலியன் விருது வழங்கப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image: விருது வழங்கப்பட்ட தருணம்
அமீரகத்தில் இந்தியரான தொழில் அதிபர் யூசுப் அலி அவர்களுக்கு சிவிலியன் விருது வழங்கப்பட்டது
இந்தியரும் வளைகுடாவை தலைமையிடமாக கொண்ட LuLu குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறிப்பாக அபுதாபியின் வணிக மற்றும் தொழில்துறை துறைகளுக்கு அளித்த பங்களிப்பு மற்றும் ஏழ்மையான மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்ற மனிதாபிமான சேவைகள் உள்ளிட்டவையின் அங்கீகரிக்கும் விதமாக மிக உயர்ந்த சிவிலியன் விருதான அபுதாபி விருதுக்கு தெரிவாகி உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அபுதாபி அல் ஹசன் அரண்மனையில் வைத்து இன்று(10/04/21) நடைபெற்ற விழாவில் அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படைகளின் துணை தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த விருதை யூசுப் அலிக்கு வழங்கினார். விருதை பெற்றுகொண்ட பிறகு, அபுதாபி அரசாங்கத்தின் இந்த மரியாதையை மிகுந்த தாழ்மையுடனும், பெருமையுடனும் பார்க்கிறேன் என்று எம்.ஏ.யூசுப் அலி தெரிவித்தார்.
யூசுப் அலி அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருகிறார்,பல கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் டிசம்பர்-31,1973 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக வந்தார். இன்று நீங்கள் காணும் இந்த உயர்வு முன்னர் நான் பல சவால்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்,இந்த நாட்டின் தொலைநோக்கு பார்வை மற்றும் விடாமுயற்சியுள்ள ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக அபுதாபியின் மகுட இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இன்று நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்றால்,அது ஐக்கிய அரபு அமீரகம் என்ற இந்த பெரிய நாட்டின் ஆட்சியாளர்கள் இங்கு வசிக்கும் குடிமக்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் ஆதரவும் பிரார்த்தனைகளும் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார் தனக்கு கிடைத்த இந்த விருதை வெளிநாட்டினருக்கு(வளைகுடா மக்களுக்கு) சமர்ப்பிப்பதாக யூசுப் அலி மேலும் கூறினார்.
யூசுப் அலி அவர்களை தவிர பல்வேறு துறைகளில் சேவை செய்ய மூன்று பெண்கள் உட்பட மேலும் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கபடும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியரும் யூசுப் அலி ஆவார். 2005 இல் பிரவாசி பாரதிய சம்மன், 2008 இல் பத்மஸ்ரீ, 2014 ல் பஹ்ரைன் Order விருது, 2017 இல் பிரிட்டிஷ் ராணியிடமிருந்து குயின்ஸ் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கூடுதலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் விசாவைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் யூசுப் அலி ஆவார்.
அபுதாபி மகுட இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான யூசுப் அலியின் தனிப்பட்ட உறவு இந்தியர்களுக்கு பெரும் பெருமை அளிக்கும் விஷயமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு அபுதாபியின் மைய பகுதியில் தனது சொந்த வீட்டைக் கட்ட ஷேக் முகமது யூசுப் அலிக்கு நிலத்தை வழங்கினார். மேலும், அபுதாபியில் உள்ள லுலு குழுமத்தின் முஷ்ரிஃப் மாலின் 40 ஏக்கர்கள் நிலம் அபுதாபி அரசு வழங்கியுள்ளது. LuLu குழுமம் 28,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58,000 பேரை தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றது. LuLu குழுமம் வளைகுடா நாடுகள், எகிப்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 207 ஹைப்பர் மார்க்கெட்டுகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் logistics மையங்களைக் கொண்டுள்ளது. LuLu குழுமம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் 250 ஹைப்பர் மார்க்கெட்டுகளுக்கு தனது இலக்காக கொண்டு விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான், துணைப் பிரதமரும் அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பலர் விருது வழங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான், துணைப் பிரதமரும் ஜனாதிபதி விவகார அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான்; அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்