அமீரகத்தில் சாலையோரத்தில் தொழுகைக்காக வாகனங்களை நிறுத்தினால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Image credit: Uae Police
அமீரகத்தில் சாலையோரத்தில் தொழுகைக்காக வாகனங்களை நிறுத்தினால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழுகைக்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தும் நபர்களுக்கு 500 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி போலீசார் எச்சரித்துள்ளனர். மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு இந்த செயல் அச்சுறுத்தலாக இருப்பதால் சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து விதிமீறலாக கருதப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்வது மற்ற வாகனங்களின் போக்குவரத்து இயக்கத்தை பாதிக்கும், குறிப்பாக மாலையில் அவசரமாக வாகன ஓட்டிகள் வானத்தில் செல்லும் போது விபத்துகளுக்கு இத்தகைய செயல் வழிவகுக்கும் என்று போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் போக்குவரத்து விதிகளுக்கு உட்படாது சீரற்ற முறையில் வாகன நிறுத்தத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை எச்சரிக்கவும் மற்றும் எதிர்மறையான செயல்களை தவிர்ப்பதற்கும் அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கனரக வாகனங்கள்,லாரிகள்,பஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளிடமும் அருகிலுள்ள மசூதிகள் அல்லது சடங்குகள் உள்ளிட்ட பிற பிரார்த்தனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அமீரக போக்குவரத்துச் சட்டத்தின் 62- வது பிரிவின் கீழ் இத்தகைய மீறல்களுக்கு 500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.