ரமலானை வரவேற்க துபாய் தயார் எனவும்,இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட விவகாரத்துறை வெளியிட்டுள்ளது
Image : துபாயில் தொழுகை
ரமலானை வரவேற்க துபாய் தயார்;பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
ரமலானை வரவேற்க துபாய் தயார் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது,அதன் விபரங்கள் பின்வருமாறு:
ரமலான் மாதத்தில் இஷா தொழுகைக்கு பாங்கு அழைப்பு விடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் மசூதிகளில் தொழுகை தொடங்க வேண்டும் என்று மத விவகாரங்கள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஒன்று கூடுதல் மற்றும் குடும்பகள் ஒன்றுகூடுதல் அனுமதி இல்லை. மசூதியும் அதன் சுற்றுப்புறங்களும் பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். இஷா பிரார்த்தனை, தாராவீ உள்ளிட்டவை அரை மணி நேரத்திற்குள் முடித்து மசூதிகள் மூடப்பட வேண்டும்.
அதுபோல் பிரார்த்தனைக்காக வருபவர்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் தொழுகைக்காக உங்கள் சொந்த முசல்லாவைக் கொண்டு வரவேண்டும். நாட்டில் பரவி வருகின்ற கோவிட் சூழலில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கான அமைச்சகம் இந்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கைகுலுக்கல்,அணைப்புகள் மற்றும் கூட்டம் சேர்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு தொழுகை முடிந்த பிறகு, உடனடியாக இரண்டாவது தொழுகை நடந்த மசூதியில் அனுமதி இல்லை. பிற நோய் உள்ளவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள் மசூதிகளில் வரக்கூடாது. மேலும் உணவு அல்லது முகமூடிகள் உள்ளிட்டவை எதுவும் மசூதிகளில் வைத்து விநியோகிக்க அனுமதி இல்லை. ரமழானின் கடைசி 10 நாட்களில் இட்டிகாஃப் கோவிட் நிலைமையை மதிப்பிட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.