தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் முறை கட்டாயம்;பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் எப்போதும் போல் தேவை அதில் எந்த மாற்றமும் இல்லை
தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் முறை கட்டாயம்
தமிழகத்தில் ஏப்ரல்-10ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதை முழு ஊரடங்கு என்று கூற முடியாது,ஆனாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தீவிரமான நோய் பரவல் நிலைமை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யபட்டுள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான ஒன்று இ-பாஸ் முறை அதன் விபரங்கள் பின்வருமாறு:
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க மற்றும் போக்குவரத்திற்கும் இ-பாஸ் தேவை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கவில்லை, எனவே இ-பாஸ் தேவையில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் வெளிமாநிலங்கள்(புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர்த்து) மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு மற்றும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் காட்டாயம் எனவும் இந்தமுறை தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே மட்டுமே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயில் பயணிகள் (புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை தவிர) இ - பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.