நேபாளம் வழியாக சவுதி செல்வோருக்கு நேபாள இந்தியத் தூதரகம் வழங்குகின்ற NOC-க்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image : இந்தியா நேபாள எல்லை
நேபாளம் வழியாக சவுதி செல்வோருக்கு நேபாள இந்தியத் தூதரகம் வழங்குகின்ற NOC-க்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
சவுதியில் நுழைய அமீரக உள்ளிட்ட பல நாடுகளை இந்தியர்கள் தற்காலிக புகலிடமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த நாடுகளில் இருந்து சவுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியர்கள் பலரும் நேபாளம் வழியாக சவுதி அரேபியாவுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேப்பாளம் செல்வோருக்கு அங்குள்ள நேபாள இந்திய தூதரகம் வழங்குகின்ற என்.ஓ.சி க்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வரையில் என்.ஓ.சி கட்டணத் தொகையாக 1020 நேபாள ரூபாய் இருந்த நிலையில்,இப்போது கட்டணமாக 2590 நேபாள ரூபாய் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவுக்கான பயணத்திற்கான தற்போது நேபாளத்தில் தற்காலிக தங்கியுள்ள இந்தியர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
நேபாளத்தைத் தவிர இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சவுதியில் நுழைய ஓமான், பஹ்ரைன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளை தற்காலிக புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பஹ்ரைன் நாடும் On Arrival விசாவுகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கட்டுபாடுகள் விதித்துள்ளது. எனவே உங்களுடைய சவுதி விசா பஹ்ரைனில் இறங்கிய பிறகு On Arrival விசா எடுக்க தகுதியான விசாவா என்பதை உறுதிப்படுத்திய பிறகு மட்டுமே பஹ்ரைன் நாட்டினை தற்காலிக புகலிடமாக தேர்வு செய்யுங்கள்.