குவைத் இந்திய தூதரகத்திற்கு வருகின்ற நபர்களுக்கு இலவச வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image credit: Indian Embassy Kuwait
குவைத் இந்திய தூதரகத்திற்கு வருகின்ற நபர்களுக்கு இலவச வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டது
குவைத்தில் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள Safat பகுதியின் பாதுகாப்பு வீரர்களின் கண்காணிப்பு பகுதியான முக்கிய Entrance- யின் டிப்ளமேடிக் என்க்ளேவ்(Diplomatic Enclave) நுழைவாயிலிலிருந்து இந்திய தூதரக வளாகம் வரையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ஏப்ரல்- 6,2021 முதல் வாகன சேவை தொடங்கப்பட்டது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி குவைத்தில் உள்ள இந்திய சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும், சவால்களுக்கும் தீர்வு காணும் தூதரகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த சேவை துவங்கிவுள்ளதாக தூதரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்திற்கு வருபவர்கள், குறிப்பாக முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் வருகின்ற குடும்பத்தினர் மற்றும் உடல்நல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். COVID-19 தொடர்பான அனைத்து சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கும் இணங்க இந்த சேவை வழங்கப்படும். இந்த சேவை முற்றிலும் இலவசம் ஆகும். இந்த இலவச சேவையினை காலை 07:00 முதல் மாலை 04:00 வரையில் ஒவ்வொரு வாரமும் தூதரகத்தின் வேலை நாட்களில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோல் தூதரகம் வருகின்ற நபர்களுக்கு இலவச மத்திய உணவு உள்ளிட்ட பல சேவைகள் புதிய தூதர் வந்த பிறகு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.