குவைத்தில் இனிமுதல் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க 5 தினார்கள் கட்டணம் வசூலிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Image: மீன்பிடித்தல் குவைத்
குவைத்தில் இனிமுதல் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க 5 தினார்கள் கட்டணம்
குவைத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மீன்பிடித்தல் தொடங்குவதற்காக சுற்றுச்சூழல் பொது ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஷேக் அப்துல்லா அல்-அஹ்மத் அனுமதி அளித்துள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும் வணிக ரீதியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கான கட்டணம் குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று அல்-அஹ்மத் செய்தி மாநாட்டில் தெரிவித்தார். இருப்பினும், வணிக சாரா மற்றும் பொழுதுபோக்குக்காக மீன் பிடிப்பதற்கான 5 தினார் Permit கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், மாதத்திற்கு 5 முறை கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,இந்த முடிவு அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.