இந்தியாவில் இருந்து குவைத்திற்கு நேரடியாகவே மற்றும் இணைப்பு சேவைகள் வழியாகவும் நுழைய காலவரையின்றி தடை விதிக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டது
குவைத் சிவில் விமான போக்குவரத்து துறை உள்ளூர் நேரப்படி இரவு(23/04/21) 10:30 மணிக்கு தீடீரென நேரடியாக விமான சேவைகளுக்கு காலவரையின்றி தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்-24 சனிக்கிழமை முதல், இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு நேரடியான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கடந்த 14 நாடுகளில் இணைப்பு(Via) சேவைகள் வழியாக இந்தியாவில் நுழைந்த பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு காலவரையின்றி எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை தொடரும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குவைத் ஏர்வேஸ் இரவு கொச்சியில் இருந்து குவைத்திற்கு புறப்படவிருந்த விமானத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த நிலையில் உத்தரவு வெளியானது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுடன் புறப்படவிருந்த விமானங்கள் கடைசி நிமிடத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்கப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுபோல் ஜசீரா ஏர்வேஸ்யும் சேவைகளை ரத்து செய்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டினர் உள்பட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இப்போது குவைத்துக்குள் நுழைய தடை நிலுவையிலுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அமீரகம்,ஓமான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பயணிகள் தங்கள் நாடுகளில் நுழைய தடை விதித்திருந்த நிலையில் குவைத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி- 7 முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய குவைத் தடை விதித்துள்ளது. ஆனால் இந்தத் தடை உத்தரவு சுகாதாரப் பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு பொருந்தாது என்ற நிலை இருந்தது. ஆனால் புதிய அறிவிப்பு அடிப்படையில் மற்றோரு அறிவிப்பு வரும் வரை, அவர்கள் வேறு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்த பின்னரே குவைத்துக்குள் நுழைய முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஊத்தரவு குவைத் நேரப்படி இன்று(24/04/21) சனிக்கிழமை அதிகாலை 12:01 முதல் நடைமுறையில் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குவைத்தில் இருந்து இந்திய திரும்ப பிரச்சனை எதும் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் சரக்கு விமான சேவை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.